இலங்கையில்..
போசாக்கு பற்றாக்குறையின் அடிப்படையில் இலங்கையானது உலகளலாவிய ரீதியில் 6ஆவது இடத்திலும், தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டை சந்திக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததால் ஒவ்வொருவரின் உணவு முறையும் பாதிக்கப்பட்டது அதிலும் வறிய குடும்பத்தில் உள்ள குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு போசாக்கில்லாமல் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களுக்கு கிளிநொச்சியில் வசித்து வரும் ஒரு தாய் சொந்தமாக சத்துமா செய்துக் கொடுத்து வருகிறார். இலங்கையில் கிளிநொச்சி, ஆனந்தநகர் பகுதியில் தாய் தன் சொந்த முயற்சியில் அனைவருக்கும் 10 ஆண்டுகளாக சத்துமா விற்பனை செய்து வருகிறார் வில்வரட்ணம் ராசலட்சுமி.
இடம்பெயர்ந்து வந்த பிறகு கடன் கொடுத்து மேலதிகமாக சோளம், பசளை என்பவற்றைக் கொடுத்து உதவியிருக்கிறார்கள். அவ்வாறு விளையும் சோளத்தை வேறு எங்காவது விற்பதற்கு பதிலாக நாங்களே அனைத்து சத்துக்களும் கொண்ட இந்த சோளத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையில் சத்துமா செய்யலாம் என்று யோசனை வந்து இதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.