கழற்றிவிடப்பட்ட மாலிக், அக்மல்!!

561

Pak

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து சோயிப் மாலிக் மற்றும் கம்ரன் அக்மல் நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதிலிருந்து முன்னாள் அணித்தலைவர் சோயிப் மாலிக் மற்றும் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

மூத்த வீரர் யூனிஸ்கான் ஏ பிரிவில் இருந்து பி பிரிவுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளார். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைட் கான் பி பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
மொத்தம் 31 வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருக்கிறார்கள்.

ஏ பிரிவில் அங்கம் வகிக்கும் மிஸ்பா உல்-ஹக், அப்ரிடி, முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல், ஜூனைட் கான் ஆகிய 5 வீரர்களுக்கு 4 லட்சத்து 49 ஆயிரத்து 218 ரூபாயும், பி பிரிவு வீரர்களுக்கு 3 லட்சத்து 14 ஆயிரத்து 452 ரூபாயும்,

சி பிரிவு வீரர்களுக்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 687 ரூபாயும், கடைசி பிரிவில் (டி) இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 89 ஆயிரத்து 843 ரூபாயும் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.