உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன், 6 வயது பிள்ளையை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேந்திரா. இவரது மகன் யோக் (6). இவரை மதியம் முதல் காணவில்லை என்பதால் யோகேந்திரா பல இடங்களில் தேடியுள்ளார்.
அப்போது பாழடைந்த கட்டிடம் ஒன்றின் அருகே தனது மகன் பிணமாக கிடந்ததைப் பார்த்துள்ளார் யோகேந்திரா. அதுவும் செங்கல்லால் தாக்கப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு யோகேந்திரா கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியபோது அதிர்ச்சி காத்திருந்தது. யோகேந்திரா வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 13 சிறுவன் தான் அவரது மகனை செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளான் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். எனினும் யோக்கை ஏன் சிறுவன் கொலை செய்தான் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.