காலில் விழ வேண்டாம் : மோடி அறிவுரை!!

536

Modi

இந்திய பார்லி., லோக்சபா சபாநாயகராக இந்தூரை சேர்ந்த சுமித்ரா மகாஜன் இன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இவரை பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அ.தி.மு.க,வை சேர்ந்த தம்பித்துரை ஆகியோர் அழைத்து சபாநாயகர் இருக்கையில் அமர செய்தனர். புதிய சபாநாயகருக்கு பிரதமர் மோடி, காங்., மற்றும் அ.தி.மு.க,. சார்பில் பாராட்டும், வரவேற்பும் அளித்து உரை நிகழ்ந்தது.

பிரதமர் மோடி வாழ்த்தி பேசுகையில், நமது சபையிலும் பெண் சபாநாயகர் என்பதில் நாம் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்ள வேண்டும். சுமித்ராவுக்கு, இந்தூர் முனிசிபல் நிர்வாக பணியே, அவரது ஆரம்ப பயணம் ஆகும். அங்கிருந்து பயணத்தை துவக்கி லோக்சபா வரை வந்துள்ளார். 8 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு எம்.பி.,க்களுடன் இந்த லோக்சபா பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். இந்த சபையில் 315 எம்.பி.க்கள் புதியவர்கள் ஆவர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

2வது பெண் சபாநாயகராக சுமித்ரா..

அ.தி.மு.க, தரப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சபாநாயகருக்கு நாங்கள் எங்கள் கட்சி தரப்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். 2 வது பெண் சபாநாயகர் என்பதில் எங்களுக்கு பெருமை தருகிறது. தமிழகத்திலுள்ள 39 இடங்களில், 37 பேர் வெற்றி பெற்று இங்கு வந்துள்ளோம். இந்த வெற்றியும் ஒரு பெண்ணின் (ஜெயலலிதா) பங்களிப்பு தான் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

லோக்சபா சுமுகமாக நடக்க அ.தி.மு.க., முழு ஒத்துழைப்பு அளிக்கும் என கூறப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களை அவையில் தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்தார்.

நல்லபடியாக பணி செய்யுங்கள்: தொடர்ந்து பா.ஜ, பார்லி., எம்.பி.,க்கள் கூட்டத்தில் அவையில் பேசிய பிரதமர் மோடி, யாரும் எனது காலில் விழ வேண்டாம். மாற்றாக அனைவரும் நல்லபடியாக பணி செய்யுங்கள், தெரியாத விஷயங்களை யாரும் பேசக்கூடாது.

மேலும் அவையில் பேசப்பட பொருள் குறித்து முன்கூட்டியே அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்து அறித்து , புரிந்து பேச வேண்டும். எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அல்லது தொகுதியில் அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டும். பார்லிமென்டின் மைய மண்டபத்தில் அதிக நேரம் இருப்பதை விட, நூலகத்தில் இருக்க வேண்டும் என கூறினார்.