பிரியங்காவுக்கு கவர்ச்சி குறைவு : டுவிட்டரில் புதிய சர்ச்சை!!

618

Ramkobal

சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் கவர்ச்சியானவர் என்று இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி டுவிட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்கும் நாளில் பாகிஸ்தான் சிறையில் இருந்த மீனவர்களும், இலங்கை சிறையில் இருந்த மீனவர்களும் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், மீனவர்கள் ரிலீஸ் ஆனதில் தனக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை. ஏனெனில் அவர்களால் ஆயிரக்கணக்கான மீன்கள் தங்கள் உயிரை இழக்க இருக்கின்றன என்று சோனியாவும், ராகுல் காந்தியும் நினைப்பார்கள் என்று எழுதியுள்ளார்.

மேலும் மற்றொரு டுவிட்டில் சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் கவர்ச்சியானவர் என்று எழுதியுள்ளார்.