டியூசன் செல்லும் வழியில் தந்தை கண் எதிரே மகளுக்கு நேர்ந்த சோகம்!!

1442

இந்தியாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கல்லூரி மாணவி ஒருவர், பேருந்து விபத்தில் தந்தை கண்முன்னே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கர்நாடக மாநிலம் மல்லீஸ்வரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் திஷா (17). இவர் தினமும் தனது தந்தையுடன் டியூசன் வகுப்பிற்கு இருசக்கர வாகனத்தில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.



நேற்றைய தினம் காலை 6 மணியளவில் திஷா தனது தந்தையுடன் சென்றுகொண்டிருந்தபோது, தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் பேருந்து சக்கரத்தில் மாணவி திஷா சிக்கியுள்ளார். அவரது தந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து போக்குவரத்து பொலிஸார் கூறும்போது, பேருந்தை இயக்கிய சாரதி இருசக்கர வாகனத்தை ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளார். அதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தந்தை மற்றும் மகள் இருவரும் பயணம் செய்தபோது தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையில் பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்து, பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.