செல்பி மோகத்தால் பலியான இரு இளைஞர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

780

திருப்பூரில்..

இன்றைய இளைய தலைமுறையினரிடையே செல்பி மற்றும் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. காலையில் எழுந்து பல் தேய்ப்பதிலிருந்து இரவு தூங்க செல்வதற்கு குட் நைட் செல்வது வரை ஒரே செல்பி மையம் தான்.



இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் வாங்க துடித்து வருகின்றனர். அத்துடன் பைக் ரேசில் செல்பி கோவில்களில் செல்பி ஏன் துக்க வீடுகளில் கூட வீடியோ கால் அழைப்புகள் மோகம் தான் அதிகரித்து வருகிறது.

இதில் புதுவிதமான செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மூலம் அதிக லைக்குகள் பெற போட்டா போட்டியும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

இதனால் பூங்கா, சுற்றுலா தலங்களை கடந்து சாலை நடுவே செல்ஃபி, வாகனத்தில் பயணித்தபடி செல்ஃபி, ரயில் பயணங்களில் செல்பி, பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டே செல்பி என அபாயகரமான நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையான வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் இது போன்ற செய்திகளை எடுப்பதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்கு ஒரு படி மேலே சென்று திருப்பூரில் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள அணைப்பாளையம் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் பாண்டியன், விஜய் ஆகிய இருவரும் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி உள்ளனர்.

நேற்று ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரயில் முன்பாக நின்று செல்பி எடுக்கப் போவதாக தன்னுடைய சக நண்பர்களிடம் பெருமையாக கூறிவிட்டு வந்தனர்.

இருவரும் அறையிலிருந்து கிளம்பி ரயில் செல்லும் போது செல்பி எடுப்பதற்காக ரயில்வே தண்டவாளம் அருகில் நின்று கொண்டு இருந்தனர். சரியாக ரயில் வரும்போது செல்பி எடுக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயிலுக்காக காத்திருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் இருவரது உடல்களையும் திருப்பூர் ரயில் நிலைய இருப்பு காவல் நிலைய போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் மீது ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.