கடற்கொள்ளையர்களால் 4 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை!!

546

SL2

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நான்கு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று இலங்கையர்கள் அடங்கிய 11 கப்பல் தொழிலாளர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் ஒன்றை கடத்திய கடற் கொள்ளையர்கள் குறித்த கப்பல் தொழிலாளர்களை பணயமாக வைத்து பணம் பெற்றுக்கொள்ள முயற்சித்திருந்தனர்.

எம்.வீ. அபேடோவ் என்ற கப்பலின் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் பாகிஸ்தான் மற்றும் ஈரானைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களில் சிலர் குறித்த கப்பல் பணியாளர்களை, ஏனைய கடற் கொள்ளையர்களுக்கு தெரியாமல் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்களை கடற் கொள்ளையர்கள் கடுமையாக சித்திரவதை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.