வவுனியாவில் நடைபெறும் மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதி முடிவுகள்!!

344

மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டியின் நேற்றைய தினம் இடம்பெற்ற 17,19 வயதுகளுக்கு இடையிலான போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி போட்டிகளில் பதினேழு வயது பிரிவுக்குட்பட்ட அணிகளில் யாழ்பாணம் இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி (St.Henry’s College) சம்பியனாகியது. இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் (Jaffna Cenral College) மூன்றாவது இடத்தை மன்னார் சென் சேவியர் ஆண்கள் கல்லூரியும் (St Xavier’s Boy’s College, Mannar )பெற்றுக்கொண்டன.

பத்தொன்பது வயதுக்குட்பட்ட அணிகளுகிடையிலான போட்டிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி (Manipay hindu college) முதலாம் இடத்தையும் வசாவிளான் மஹா வித்தியாலயம் (Vasavilaan maha vidyalayam ) இரண்டாம் இடத்தையும் மூன்றாவது இடத்தை மன்னார் சென் சேவியர் ஆண்கள் கல்லூரியும் (St Xavier’s Boy’s College, Mannar )பெற்றுக்கொண்டன.

-பண்டிதர்-

118
2 34