17 வயது சிறுமியை திருமணம் செய்யவுள்ள சோயப் அக்தர்!!

533

Akthar

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு 17 வயது சிறுமியுடன் திருமணம் நடக்கவுள்ளது.

பாகிஸ்தான் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் அக்தர். 39 வயதான இவருக்கு திருமணம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் பெண் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், அக்தர், ருபாப் என்ற 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் வருகிற 12ம் திகதி சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு செல்லும் அக்தருக்கு யூன் 3வது வாரத்தில் திருமண திகதி குறித்து முடிவு செய்யப்படும் என்று அக்தரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வருகிற யூன் 19ம் திகதி மெஹந்தி நிகழ்ச்சியும், அடுத்த நாள் ருக்சதி நிகழ்ச்சியும் மற்றும் யூன் 22ம் திகதி ராவல்பிண்டி நகரில் வலிமாவும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.