கிறிஸ் கெய்ல் பற்றிய வெளிவராத ரகசியம்!!

424

Gayle

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெளுத்து வாங்கும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், கால்பந்து பிரியர் என்பது பலருக்கும் தெரியாது.

உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிபா 20–வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி அடுத்த வாரம் பிரேசிலில் தொடங்குகிறது.

இதுகுறித்து கெய்ல் கூறுகையில், நான் சிறுவயது முதலே கால்பந்து ரசிகன். பள்ளியில் படிக்கும்போது 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து அணியை வழிநடத்தினேன்.

பள்ளி விட்டு வீடு வந்தபிறகும் கால்பந்துதான் விளையாடுவேன். அப்போதெல்லாம் எனக்கு கிரிக்கெட் பற்றிய எண்ணம் இருந்ததே கிடையாது.

இந்த உலக கிண்ணக் கால்பந்து போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். எப்போதுமே நான் பிரேசில் அணியின் ரசிகன், இந்த முறை சொந்த மண்ணில் உலக கிண்ணப் போட்டி நடப்பது பிரேசில் அணிக்கு நெருக்கடி தரலாம்.

ஆனால் சிறப்பாக வியூகம் அமைத்து விளையாடி அந்த அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.