ஓடும் ரயிலில் கைப்பேசி பறிப்பு.. தவறி விழுந்து பலியான இளம்பெண்!!

801

சென்னையில்..

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ப்ரீதாவிடம்செல்போன் பறிக்கப்பட்டது. இதனால் அந்த மாணவி செல்போனை தாவி பிடிக்க முயன்றதில் பிரீத்தி ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.



இதில் படுகாயம் அடைந்த ப்ரீத்தி உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி ப்ரீத்தி உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ் , மணிமாறன் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை கந்தன்சாவடியில் வசித்து வரும் 23 வயது இளம் பெண் ப்ரீத்தி. இவர் பி.காம் முடித்துவிட்டு கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை2ம் தேதி மின்சார ரயில் மூலமாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 2 இளைஞர்கள் இவரது செல்போனை பறித்து தப்பி ஓடத் தொடங்கினர்.

ரயிலில் இருந்து செல்போனை பறிக்கும் போது இளம் பெண்ணையும் இழுத்ததால் அவர் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். பரீத்தி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்களால் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.