ஆப்கானிஸ்தானில் 100 பேரை விழுங்கிய பயங்கர வெள்ளம்!!

610

Afcan

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் சிக்கி 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பஹான் மாகாணத்தில் உள்ள கசாராக் இ நூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பயங்கர சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பொழிந்துள்ளது.

இதனால் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் அடித்து இழுத்து செல்லப்பட்டதுடன், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. தற்போது மழையில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டின் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.