பெண்ணின் வயிற்றில் 15.6 கிலோ கட்டியை அகற்றி உலக சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்!!

357

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் தனது கர்ப்பப்பையில் அதிக தசை வளர்ச்சி பெற்ற கட்டியை சுமந்து வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த கட்டியை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கிறார்.

இந்த கட்டியின் அழுத்தம் அதிகமாக சமீபத்தில் பிறப்புறுப்பு வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மூச்சுவிடவும் அவர் சிரமப்பட்டு வந்ததையடுத்து, சென்னை குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்.

அங்கு சோதனை செய்து பார்த்ததில், கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில் 15.6 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மருத்துவர் எஸ்.பி.சிவகுமார் மற்றும் மருத்துவர் மணிமேகலை தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றியுள்ளனர்.

இதற்கு முன்பு ஆபிரிக்காவில் 9.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. இப்போது 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றியிருப்பது மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

k1
K2 K3