வெளிநாட்டில் பணிப்பெண்ணை துன்புறுத்திய இலங்கை தம்பதிக்கு ஏற்பட்ட நிலை!!

1140

இலங்கையில்…

தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு கூடுதலாக இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் வேவர்லி பகுதியை சேர்ந்தவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட குமுதினி கண்ணன்(53), அவரது கணவர் கந்தசாமி(57).



கணவனும், மனைவியும் சேர்ந்து 60 வயதான தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளாக வீட்டில் அடிமையாக வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தம்பதி மீது 2016ம் ஆண்டு ஆஸ்திரேலிய பெடரல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விக்டோரியா கவுன்டி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

இதில் தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், குமுதினிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது கணவருக்கு 6 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக்கூடாது என குமுதினி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வேறு ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குமுதினிக்கு கூடுதலாக இரண்டரை ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.