மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

1052

களனியில்..

வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் பல்கலைக்கழ மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று (12.07.2023) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய எஸ்.ஆர்.ருஷாங்கி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி ஆடைகளை அழுத்த மின்னழுத்தியைக் கையாண்டபோதே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.