வவுனியாவில் 34வது வீரமக்கள் தினம் : அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி!!

1028

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34ஆவது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று (13.07.2023) இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது டன் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், முன்னாள் நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.