தண்ணீரில் தவறி விழுந்து 18 மாத குழந்தை பலி.. கதறி துடித்த பெற்றோர்!!

642

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் டி.எடையார் கிராமத்தில் வசித்து வருபவர் முகில்வண்ணன். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தியாஸ்ரீ என்ற பெண் குழந்தை .



இந்த குழந்தை நேற்று பிற்பகலில் வீட்டு சமையலறைக்குள் விளையாடிக் கொண்டிருந்தது. ஆஷா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்ததால் குழந்தையை கவனிக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் குழந்தையின் சத்தம் நின்று விட்டதால் ஆஷா அதிர்ச்சி அடைந்தார். உடனே குழந்தை விளையாடிக் கொண்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்ததில் குழந்தை தியாஸ்ரீ அங்கு அன்னக்கூடை தண்ணீரில் தவறி விழுந்து கிடந்தாள்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆஷா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை தியாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றரை வயது குழந்தை அன்னக்கூடை தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.