ஐ.நா மனித உரிமைகள் மாநாடு இன்று ஆரம்பம்!!

599

UN

ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமைகள் அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் 27ம் திகதி வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய, விசாரணைக்குழு இன்றைய அமர்வில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை கலந்து கொள்ளும் இறுதி மனித உரிமைகள் அமர்வு இதுவெனவும் கூறப்பட்டுள்ளது.