பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள சுசித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சு முறை!!

543

Senanayake

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுசித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சு முறைமை அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகின்றது. இந்த நிலையில் அந்த அணியுடன் இடம்பெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் சுசித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சு முறைமை பற்றி சந்தேகம் வெளியிடப்பட்டது.

இதன்படி அவரது பந்து வீச்சு தொடர்பான பரிசோதனைகள் கார்டிஃப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.