அமைச்சர்களூடாக வேலை பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது!!

622

A1

அமைச்சர்களூடாக வேலை மற்றும் ஒப்பந்தங்கள் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு விசேட விசாரனைப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி இவர் நுகேகொடையில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
இவர் பன்னிப்பிட்டிய ருக்மலே பகுதியைச் சேர்ந் 43 வயதானவர் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரான இவர் பலரை ஏமாற்றி சுமார் 20 லட்சம் ரூபா வரை ஏமாற்றியதாக தெரிய வந்துள்ளது. இவரை இன்று நுகேகொடை நீதவான் நீதி மன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.