சென்னையில்..
சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அரவிந்த்-க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தனது 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு எதோ மாத்திரையை கொடுத்துள்ளார்.
பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்துள்ளார். பின்னர் அரவிந்த் தானும் தற்கொலை செய்துகொள்ள அதே மாத்திரையை உட்கொண்ட பிறகு அவரது கை நரம்பையும் லேசாக அறுத்துகொண்டுதில் மயக்கமடைந்துள்ளார்.
அவரது உறவினர்கள் அரவிந்த்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அரவிந்த் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி கையில் இருந்து வெளியேறிய இரத்தம் அறை முழுவதும் பரவி நிலையிலும், 7-வயது மகள் வாயில் நுரை தள்ளியபடியும் உயிரிழந்த நிலையிலும் இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக அரவிந்த்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் உயிரிழந்த தாய், மகள் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 17 லட்சம் கடன் உள்ளதாகவும், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் மனஉளைச்சலில் வேறுவழி தெரியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து குழந்தைக்கு மாத்திரை கொடுத்தும், மனைவி மற்றும் அரவிந்த் இருவரும் மாத்திரை உட்கொண்டு கை நரம்பை அறுத்துகொண்டாதாக கூறியுள்ளார்.