மணமேடையில் உயிரை விட்ட மணப்பெண்!!

293

Wed

தேனியில் திருமண மண்டபத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகள் ஜோதிராணி (19) என்ற பெண்ணிற்கும், அதே பகுதியை சேர்ந்த அழகன் மகன் மணிகண்டனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை திருமண மண்டபத்தில் உறவினர்கள் கூடியிருக்கும் வேளையில் மணமேடைக்கு வந்த ஜோதிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை அறிந்து திருமணத்துக்காக கூடியிருந்த உறவினர்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். மேலும் இவ்விடயம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.