சென்னையில்..
சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்அவுஸ் பல் லவன் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ் ( 33). இவர் தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு லித்திக் (1), லித்தேஸ் (4) என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். செந்தமிழ், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை அனைவரும் வீட்டில் டிவி பார்த்து கொண்டு இருந்தனர். அந்த நேரம் லத்திக் வீட்டில் தூங்க கொண்டிருந்தான். மற்றொரு குழந்தையான வித்தேஸ் மாடியில் உள்ள பால்கனியில் சிறிய நாற்காலியில் ஏறி நின்று சாலையை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளான். இதில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியதை சாலையில் சென்றவர்கள் பார்த்தனர். உடனே அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்தது லித்தேசின் குடும்பத்துக்கே தெரியாது. மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்கு சேர்த்த பின்னரே செந்தமிழுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தான் அவர் மனைவியுடன் அலறி அடித்துக் கொண்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்றார். சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான்.
முறையான சிகிச்சை அளிக்காததே குழந்தை இறப்புக்கு காரணம் என்று செந்தமிழ் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இரட்டை குழந்தைகளில் ஒன்றை இழந்து பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.