காதலனை தீர்த்து அதிரடி திட்டம் போட்ட காதலி.. பாம்பை கடிக்க வைத்து கொன்ற கொடூரம்!!

413

உத்தராகண்டில்..

உத்தராகண்டில் பாம்பை கடிக்க வைத்து காதலரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஜூலை 14 அன்று நடந்ததுள்ளது. காரில் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.



இந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். அங்கு 30 வயது மதிக்கதக்க நபர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவரது கார் இன்ஜின் இயங்கிய நிலையிலேயே இருந்துள்ளது.

பின்னர் இறந்த நபரின் உடலில் பாம்பு கடித்த அடையாளங்கள் இருந்தன. பின்னர் பிரேத பரிசோதனையில் நாகப்பாம்பு கடித்தால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில் உயிரிழந்த நபர் தொழிலதிபர் அங்கித் சவுகான்(30) என்பது தெரியவந்தது.

ஆனால் அவரது சகோதரி இஷா, அங்கித் சவுகான் மரணத்தில் அவரின் காதலி மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அங்கித் சவுகான் மரணத்தில் அவரில் காதலியை விசாரிக்க போலீசார் முடிவு எடுத்தனர்.

அதன்படி நடத்திய விசாரணையில் மஹி செல்போனை ஆய்வு செய்ததில் அவர் பாம்புப் பிடாரன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. பின்னர் தீவிர விசாரணையில் அங்கித் சவுகானை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா (28). இவரும் அங்கித் சவுகான் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் மஹி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மஹி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்துள்ளார். மேலும் கொலைத் திட்டத்தில் தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக்காரி உஷாதேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.

மேலும் கொலை செய்வது எப்படி என்பதை தொலைக்காட்சி தொடரைப் பார்த்து கற்றுத் தேர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கொலை செய்வது எப்படி, தடயங்களை அழிப்பது எப்படி என்பதை யூடியூப் மூலம் பார்த்துள்ளார்.

பின்னர் காதலரை, நல்ல பாம்பை விட்டு கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்துவிட்டார். இந்நிலையில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி மஹி ஆர்யா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். அண்மையில் நல்ல பாம்பை வாடகைக்குக் கொடுத்த பாம்புப் பிடாரன் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தலைமறைவான 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளோம். அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களைக் கைது செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.