நடு வீதியில் இளம் பெண் துடிதுடித்து பலியான சோகம்!!

1234

கும்பகோணத்தில்..

சாலை ஓரத்தில் இருந்த குல்மொஹர் மரம் அடியோடு சாய்ந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் டூவீலரை ஒட்டிச் சென்ற வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பகோணத்தில், பலத்த காற்று வீசியதில் வேருடன் மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.



கும்பகோணம் அருகே சரவணப்பொய்கை தெருவைச் சேர்ந்தவர் வள்ளி (37). கணவரை பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். வள்ளி, தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி தன் மகனையும், தாயையும் கவனித்து வந்துள்ளார். இவருடன் கீழமாஞ்சேரியைச் சேர்ந்த சோபனா (32) என்பவரும் வேலை செய்து வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஆடி வெள்ளிக்கு சாமி கும்பிடுவதற்கு பூஜை பொருள்கள் வாங்க, டூவீலரில் கும்பகோணத்திற்கு வள்ளியும், சோபனாவும் சென்றுள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியது.

வளையப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த குல்மொஹர் (செம்மயிற்கொன்றை) மரம் அடியோடு சாய்ந்து இருவர் மீதும் விழுந்தது. இதில், டூவீலரை ஒட்டிச் சென்ற வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சோபனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக கும்பகோணம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மரம் விழுந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.