இலங்கையில் புகைப்பிடித்தலால் நாளாந்தம் 65 பேர் உயிரிழப்பு : வருடத்துக்கு 450 கோடி செலவு!!

604

SL

நாளொன்றுக்கு இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில் சுமார் 65 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அரசாங்கம் புகைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருடத்துக்கு 450 கோடி ரூபாவை செலவிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்பழக்கத்தினால் வருடாந்தம் சுமார் 21 ஆயிரம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயாளர்களில் 60 வீதத்தினருக்கு மேற்பட்டோர் கூடுதலாக புகைப்பிடிப்பவர்கள் எனவும் தெரிவித்தார்.