வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23.07.2023) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன்,பாரவூர்தியும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடரூந்துடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், மற்றொரு நபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.