இரண்டு நாட்களில் மீண்டும் உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி : கடும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா!!

1143

இலங்கையில்..

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(24.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.



இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (24.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 334.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 254.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 241.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 374.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 356.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 432.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 412.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.