13 வயதான மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்!!

533

A12

சம்மாந்துறை பிரதேசத்தில் 13 வயதான தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மாவட்ட நீதவான் நீதமன்ற நீதவான் ரீ.கருணாகரன் உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியும் தாயும் இணைந்து சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான (56) குறித்த நபர், சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.