சென்னை விமான நிலையத்தில் தமிழ் தம்பதிக்கு நேர்ந்த சோகம் : தாலியை கழட்ட சொல்லி அதிகாரிகள் அட்டூழியம்!!

766

சென்னையில்..

சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த மலேசியா வாழ் தமிழ் தம்பதியை சுங்கத்துறை அதிகாரிகள் , பெண்னின் கழுத்தில் இருந்த தாலியை கழட்டசொல்லி அட்டூழியம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில்,இன்று காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மலேசியாவைச் சேர்ந்த தமிழ் தம்பதி வெளியே வருகையில் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது அதிகாரிகள் பெண் அணிந்திருந்த தங்க தாலி செயினை கழட்ட சொல்லி வற்புறுத்திய நிலையில் அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த பெண் நாங்கள் கல்யாணம் முடிந்ததில் இருந்து என் தாலியை நான் கழட்டி வைத்தது இல்லை என்று தெரிவித்த நிலையில், அவரது கணவர் அதிகாரிகளிடம் எப்படி தாலியை கழட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர், நீங்கள் இந்தியர்கள் கிடையாது என்றும் நீங்கள் மலேசியன் என்று கூறியுள்ளார். அப்போது அந்த தம்பதிகள் எங்களுக்கு எவ்வளவு நகை கொண்டு வரவேண்டும் என்று தெரியாது என்றும் எவ்வளவு அபராதம் என்றும் கேட்டுள்ளார்.

மேலும் தங்களை விமான நிலையத்தில் 2 1/2 மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் நாய் மாதிரி ட்ரீட் செய்ததாக கூறிய அந்த பெண் அதுமட்டுமல்லாது தன் கணவரிடம் இருந்த நகையை அதிகாரிகள் பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.அதுமட்டுமல்லாது தங்கள் நகை மீட்க லட்சக்கணக்கில் சுங்கத் துறை அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுங்கத்துறை அதிகாரிகள் தனக்கு அபரதமாக 7 லட்சம் ரூபாய் எழுதியதாகவும் பின்னர் அதை ரூ 5 லட்சமாக குறைத்தாகவும் அப்போது அங்கிருந்த மற்றொரு சுங்கத்துறை அதிகாரி ஏன் சார் இவ்வளவு குறைத்துவீட்டீர்கள் என கேள்வி எழுப்ப, மற்றொரு அதிகாரி பிழைத்து போகட்டும் என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இது இந்தியா..என்ன நடக்குது.. ஏன் இவ்வளவு கேவலமாக நடத்துறீங்க… இது இந்தியா 10 கிராமில் தான் தங்கம் கொண்டு வரவேண்டும் என்றால் எப்படி முடியும் என்றும் அப்பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் சம்பவம் குறித்து மலேசியன் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் கூறியுள்ளார்.