தங்கத்தின் விலையில் சடுதியாக பதிவான தலைகீழ் மாற்றம்!!

3869

தங்கம்..

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று சடுதியாக தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.நேற்றைய தினம் (24.07.2023) தங்கத்தின் விலை குறைந்திருந்தது.



அதன்படி செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 156,300 ரூபாவாக பதிவாகியிருந்தது.24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,000 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா அதிகரித்து 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக காணப்படுகிறது.இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகிய விலைகளின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவை கடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.