வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 23.07.2023 அன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டமையுடன் வீட்டிற்கும் தீ வைத்தததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததமையுடன் பத்து நபர்கள் தீக்காயங்களுக்குள்ளாகியிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்பி ருவான் குணசேகர, குறித்த வீட்டில் வசித்து வந்த 19வயது சிறுமியின் பிறந்தநாள் வைபவம் 22ம் திகதி இரவிலிருந்து இடம்பெற்று வந்துள்ளது.
இதன் போது வீட்டிற்கு வருகை தந்த சிலரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளமையுடன் வீட்டு உரிமையாளருக்கு பாரிய ஆயுதத்தினால் தாக்கி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரனையில் தெரியவந்துள்ளது.
வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதுவரை இச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் நேற்றையதினம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டமையுடன்,
காயமடைந்தவர்களில் 7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களின் ஒருவரின் நிலமை கவலைக்கிடமான நிலையில் காணப்படுகின்றமையும் குறிப்படத்தக்கது.