வவுனியா தம்பனைச்சோலை, சாந்தசோலை முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ.பிரசாத்!!

630

வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த ஞாயிறு (08.06.2014) அன்று நடைபெற்றது.

இவ் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ. பிரசாத் அவர்களால் முன்பள்ளி சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இதே வேளை கடந்த ஞாயிறு அன்று (08.06.2014) சாந்தசோலை இராமர் ஆலயத்துக்கு சென்ற இ.பிரசாத் அவர்களால் சீதை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சைவ சமய பாடப்புத்தகங்களும் , கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

2 3 04 4 5 6 7 8