வவுனியாவில் வடமாகாண ஆளுனரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!!

1044

வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் வடமாகாண ஆளுனரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று (26.07.2023) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுனரை தொடர்பு கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமையுடன்,



வாரநாட்களில் மக்கள் தமது முறைப்பாடுகளை இவ் அலுவலகத்தில் தெரிவிக்க முடியும் என்பதுடன் மாதத்தில் இரு தடவைகள் ஆளுனர் இங்கு விஐயம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இக் கட்டிடத்தினை வடமாகாண ஆளுனர் பி.எஸ்எம்.சாள்ஸ் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.

இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன், உள்ளூராட்சி அதிகாரிகள், ஆளுனர் அலுவலக அதிகாரிகள், நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் சீனி தொழிற்சாலைக்கு என 400 ஏக்கர் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் ஆளுனரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

அது தொடர்பில் தெரியாது எனவும் மேலும் அவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு பணிக்க வேண்டிய தேவை எனக்கில்லை இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது தெரிந்தால் அறிவிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.