டெல்லியில்..

டெல்லியில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி நர்கீஸ்(25).

இவருக்கு இர்ஃபான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இர்ஃபான் டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் தெரிவித்துள்ளார். ஆனால் நர்கீஸ் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் நர்கீஸ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளான். பின்னர் நர்கீஸ் பேச மறுத்த நிலையில் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளான். நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான்.

இதனை நம்பி வந்த நர்கீஸை ஈவு இறக்கமின்றி இரும்பு கம்பியால் துடிக்க துடிக்க அடித்து கொன்றுள்ளான். பின்னர் நர்கீஸ் உடலை கல்லூரி அருகே வீசிவிட்டு சென்றுள்ளான். மறுநாள் தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே நர்கீஸின் சடலம் கிடந்துள்ளனது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.

பெண்ணின் உடலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. விசாரணையில் இர்ஃபானுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இர்ஃபான் தான் கொலை செய்ததை ஓப்புக்கொண்டார். பின்னர் போலீசார் இர்ஃபானை கைது செய்தனர்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவத்தை அறிந்து, பெண்களுக்கு தேசிய தலைநகரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன: தாப்ரியில் ஒரு சிறுமி சுட்டு கொல்லப்பட்டார். அரபிந்தோ கல்லூரி அருகே ஒரு பெண் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கூறினார்.





