கவுண்டி கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!!

477

Ball

இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சம்பியன்ஷிப் கிரிக்கெட்டில், சோமர்செட் அணியின் பந்துவீச்சாளர் அல்போன்சா தோமஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அல்போன்சாவின் பந்து வீச்சு சிறப்பாக விளங்க, சஸ்செக்ஸ் அணியின் வீரரான ஜேம்ஸ் அன்யனை முதல் பந்தில் வீழ்த்தினார்.

அடுத்த பந்தில் ரோரி ஹாமில்டனை எல்.பி.டபிள்யூ. முறையிலும், தொடர்ந்து எட்ஜாய்சை கேட்ச் முறைப்படியும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

அந்த ஓவர் முடிந்து விட்ட நிலையில், தனது அடுத்த ஓவரை வீச தயாரான அல்போன்சா முதல் பந்தில் மேட் மச்சானையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் கவுண்டி சம்பியன்ஷிப் போட்டியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும் உலக அளவில் முதல்தர கிரிக்கெட்டில் இவ்வாறான சாதனை நிகழ்வு நடப்பது இது 18வது முறையாகும்.