ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்களின் கதறல்!! (வீடியோ)

613

Stu

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காணொளி இணையதளத்தில் வெளியாகயுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் ஆற்றின் நடுவே இருந்த பெரிய பாறையில் நின்று புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில் லார்ஜி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 24 மாணவ, மாணவியர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவ, மாணவியர் ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நின்று புகைப்படம் எடுத்ததும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது அவர்கள் செய்வதறியாது திணறிய காணொளி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.