இதுவல்லவா விசுவாசம் : விஜயை பூரிக்க வைத்த இரசிகன்!!

529

Vijay

தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உற்சகமாகி வரும் விஜய், மதுரை இரசிகர்களை சந்தித்த மகிழ்ச்சியில் உள்ளார்.

ஒரு இரசிகனின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு, அவன் இரசிக்கும் ஹீரோவோடு ஒரு புகைப்படம். இது விஜய்க்கு தெரியாதா என்ன. சந்திக்க வந்த இரசிகர்கள் அனைவரோடும் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்க்கு ஆச்சரியமான விஷயங்களும் காத்திருந்தது.

‘விஜய் இன் ஆயுட்கால விசுவாசி’ என்று தன் உடம்பில் பச்சைக்குத்தி இருக்கும் இரசிகர் ஒருவர் தன் சட்டையை கழற்றி காண்பிக்க. அவருடன் ஆனந்த பூரிப்போடு தன் ஐபோனில் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், அதை தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இது ஆரம்பம் தான் இன்னும் 22ம் திகதி வரை பல கொண்டாட்டங்கள் இருக்கிறது என்று உற்சாகமாய் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் விஜய் இரசிகர்கள்.