வவுனியாவில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து : இருவர் காயம்!!

1504

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (02.08.2023) இரவு 10 மணியளவில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி முன்பாகவிருந்து வீதிக்கு ஏற முற்பட்ட துவிச்சக்கரவண்டி மீது வைத்தியசாலையிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.



இவ் விபத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் இரு வாகனங்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.