பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!!

644


அதா சர்மா..2008-ல் வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அதா சர்மா. அதன்பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த இவர், 2017-ல் சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து இருந்தார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கேரளாவில் இளம்பெண்கள் காணாமல் போன சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் வந்தது.
பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு மிரட்டல்கள் வருவதாக அதா சர்மா தெரிவித்து இருந்தார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.


இந்த நிலையில், நடிகை அதா சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.