சிறுவனின் உயிரைப் பறித்த டொல்பின்!!(வீடியோ)

547

அமெரிக்காவில் டொல்பின் சிலை உடைந்து விழுந்ததில் 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

அமெரிக்காவின் உடா மாநிலத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் தனது குடுப்பத்தினருடன் கடந்த 6ம் திகதி சான்பிரான்ஸிஸ்கோ மாகாணத்தில் உள்ள வார்ஃ என்னும் மீனவர் பகுதியில் சுற்று பயணம் சென்றிருந்தான்.

அப்போது அங்கிருந்த 6 அடி உயர டொல்பின் சிலையை சுற்றியபடியே சிறுவன் விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென அவன் தலையில் அந்த சிலை நொறுங்கி விழுந்துள்ளது.

இதனையடுத்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில் சிறுவன் அச்சிலையின் மீது ஏற முயன்றபோது, இந்த அசாம்பாவித சம்பவம் நிகழ்ந்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

B1 B2 B3