பிணங்களை சாப்பிட்ட சகோதரர்களுக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை!!

593

Dead BodyDead Body 1

பாகிஸ்தானில் இரு நபர்கள் பிணங்களை சாப்பிட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரிகளிடம் விசாரணை நடத்தியில், குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் சாப்பிட்டது தெரியவந்தது.

கடந்த 2011ம் ஆண்டு அவர்களை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர்.

தண்டனை காலம் முடிந்து 2013ல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு சிறு குழந்தையின் தலையை சாப்பிட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் நரமாமிசம் தின்பவர்களை தண்டிக்க தனிச்சட்டம் ஏதும் இல்லாததால், அவர்கள் மீது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

ஏற்கனவே நரமாமிசம் தின்ற வழக்கில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை அனுபவித்துள்ளதால் இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை மிககடுமையானதாக இருக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இதனையடுத்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.