கேரளாவில் உள்ள கிராமம் ஒன்று இரட்டையர்கள் கிராமம் என்ற பெயரில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடிஞ்சி என்ற கிராமத்தில் கடந்த 2008ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விடயங்கள் வெளிவந்துள்ளன.
அதாவது முதலில் 100 இரட்டையர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, தற்போது 400 ஜோடி இரட்டையர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிராமத்தில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று எந்த ஆய்வுகளினாலும் இதுவரையில் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், இதில் மற்றொரு சுவாரசியம் என்னவெனில் இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து திருமணமாகி செல்லும் பெண்களும் இரட்டையர்களையே பெற்றெடுக்கின்றனர்.






