
அமெரிக்காவில் இளம்பெண்ணுக்கு பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டல் இமெயில் அனுப்பிய இந்தியர் ஒருவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கார்த்திகேயன் நடராஜன் (27) என்ற இந்தியர் வசிக்கிறார். அவர் தனது பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். இதை அந்த பெண் ஏற்கவில்லை.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உன்னை நான் பலாத்காரம் செய்யப் போகிறேன் என்று குறிப்பிட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இமெயில் அனுப்பி மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இது குறித்து அந்த பெண் பொலிசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக, பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கு கலிபோர்னியாவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நோரா பாரி பிஷர் உத்தரவிட்டார். இதை அரசு தரப்பு வழக்கறிஞர் டேவிட் ஹிக்டன் தெரிவித்தார்.





