வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 வீடுகள் சேதம் : 10 பேர் பாதிப்பு!!

1962

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 3 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று (09.08.2023) மாலை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பாவற்குளம் படிவம் 6 பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும்,



பிரமனாலங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும், முதலியார்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களும் என 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன், குறித்த மூன்று குடும்பங்களும் வசித்து வந்த 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.