இலங்கையின் வீதிகளில் சுற்றித்திரியும் பிரித்தானிய முன்னாள் பிரதமர்!!

1014

இலங்கையில்..

இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் செயற்பாடு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக செயற்பட்ட கெமரூன், தனது மனைவியுடன் எளிமையான முறையில் இலங்கையை சுற்றிப் பார்த்துள்ளார்.

உனவட்டுன, மிரிஸ்ஸ, சிகிரியா, உடவலவ, பின்னவல, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். கடலில் குளித்தவர், வீதி ஓரங்களில் உள்ள சிறிய பெட்டிக்கடைகளிலும் உணவு பெற்றுக்கொண்டுள்ளார். கேமரூனை அடையாளம் கண்ட ஒரே நபர் விமான நிலைய குடிவரவு அதிகாரி மாத்திரமே என அவர் கூறியுள்ளார்.

சாதாரண பயணியாக இலங்கை வந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சாதாரண பயணியாகவே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்த கெமரூன் குடும்பத்தினர் பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் தனது பழைய நண்பர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அரை மணி நேரம் சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.