நாடு கடந்த காதல்.. தென்னாப்பிரிக்க பெண்ணை திருமணம் செய்த தமிழ் இளைஞன்!!

624

தமிழகத்தில்..

தமிழக இளைஞர் ஒருவர், தென்னாப்பிரிக்க பெண்ணை காதலித்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரைச் சேர்ந்த தம்பதி செல்லத்துரை மற்றும் சின்ன பொண்ணு. இவர்களுக்கு குட்டிமார்க்ஸ் என்ற மகன் உள்ளார்.

இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு தென்னாப்பிரிக்க நாட்டின் எத்தியோபியா நகரில் உள்ள அர்பா மினாச் அரசு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அப்போது, அதே பல்கலைக்கழகத்தில் எத்தியோப்பியா நாட்டின் அடமா நகரரைச் சேர்ந்த அக்லிலுகிஸான் என்பவரின் மகளான மென்பரே அக்லிலு என்பவர் துணை பேராசிரியையாக பணியாற்றினார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டின் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ஆப்பிரிக்க மணப்பெண் மென்பரே அக்லிலு சேலை அணிந்து மாலை மாற்றி தமிழக இளைஞரை கரம் பிடித்தார். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. இவர்களது திருமணத்தில் கலந்த கொள்ள மணப்பெண்ணின் வீட்டாருக்கு விசா கிடைக்காததால் அவர்களால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.