இரண்டு முறையும் தோல்வி : தந்தையும் மகனும் தற்கொலை செய்த சோகம்!!

876

சென்னையில்..

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் 2 முறை தேர்வு எழுதியும் தோல்வியைடந்ததால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்தார்.

அதே சமயம் தன்னுடன் பயின்ற சில மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்ததும், இருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் செலுத்தி சேர்ந்ததும் தெரிய வந்ததால் ஜெகதீஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலிஸார் விசாரணைக்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகனை இழந்த சோகத்தில் தந்தை செல்வமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் செல்வத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு தோல்வி விரக்தியில் மாணவன் உயிரிழந்த நிலையில், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.