அசானி கனகராஜ்..
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் சீசன் 3 யில் மேடையில் நேற்றைய தினம் இலங்கை சிறுமி அசானி கனகராஜ் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்தி கொண்டார்.சரிகமப நிகழ்ச்சியின் 3 வது சீசன் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வார நிகழ்ச்சியின் இடையில் சரிகமப மேடையில் கேட்ட ஒரு குரல் ஒட்டுமொத்த மலையக மக்களின் அடையாளமாக நின்றது.பாடல் நிகழ்ச்சிக்கு தேர்வான அசானி பணப் பிரச்சினையால் இந்தியா சென்றடைய தாமதமாகிவிட்டது.இந்த நிழ்ச்சிக்கு தாமதமாக சென்ற இலங்கை சிறுமி அசானி ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்பதற்காக, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு வாய்ப்பை வழங்கியது.
இதனையடுத்து, ‘ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ’ என்ற பாடலை பாடி முடித்ததும் நடுவர்கள் வெறும் வானொலி பாட்டை கேட்டு இப்படி பாடுவது என்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். பாடலை பற்றி கூறும் முன்பு உங்களை பற்றி கூறுங்கள் என்று கோரினார்கள்.
”சிறுவயதில் இருந்தே பாடுவதற்கு எனக்கு மிகவும் விருப்பம். எனது பெற்றோர் நான் பாடும் போது உயர்ந்த இடத்திற்கு வருவேன் என்று அடிக்கடி கூறுவார்கள். எனக்கு 14 வயது, நான் 9ம் வகுப்பில் படிக்கிறேன். நான் மேடையில் பாடுவது இது தான் முதல் முறை” என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி மேடையில் பேசிய அசானியின் தந்தை கனகராஜ் பணப்பிரச்சினை இருந்தது. இதனால் முதலில் வாய்ப்பை மறுத்து விட்டேன். பிறகு ஊர் மக்கள் பணம் சேர்த்து தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவை வந்தடைய இலங்கை காசுப்படி ஒரு இலட்சம் பணம் தேவைப்பட்டது. தோட்ட தொழிலாளியான நான் அதை சம்பாரிக்க 2 ஆண்டு சென்று இருக்கும். மேலும், கடல் தாண்டி சாதிக்க உதவி அத்தனை உறவுகளுக்கும் நன்றி கூறினார்.
இதனை கேட்ட நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி ஆகியோர் சரிகமப மேடையை நம்பி வந்த சிறுமி ஒரு போதும் ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்று இன்னும் 2 வாரங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனாவும் அசானிக்காக கண்ணீர் சிந்தியதுடன் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அசானிக்கு செய்த உதவிக்காக நன்றி தெரிவித்தார்.